இன்றைய பஞ்சாங்கம்
10-10-2020, புரட்டாசி 24, சனிக்கிழமை, அஷ்டமி திதி மாலை 06.17 வரை பின்பு தேய்பிறை நவமி.
புனர்பூசம் நட்சத்திரம் பின்இரவு 01.17 வரை பின்பு பூசம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 1.
ஜீவன் – 1/2.
கால பைரவர் வழிபாடு நல்லது.
புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் – 10.10.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். குழந்தைகளுடன் இருந்த மனஸ்தாபம் அனைத்தும் நீங்கும். பழைய பாக்கி வசூலாகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுப செலவு உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நல்ல பலனை கொடுக்கும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு தொகையைச் செலவிட கூடும்.சுப காரியங்களில் தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். பெரியவர்களின் ஆறுதல் வார்த்தை தெம்பை கொடுக்கும். கவனமாக இருங்கள் அதுவே நல்லது.
மிதுனம்
உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்களால் வீட்டில் மன நிம்மதி ஏற்படும். குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் காண்பீர்கள். உடன் பிறந்தவர்களின் மூலம் அனுகூல பலன் கிட்டும்.தொழில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். சேமிப்பு பணம் உயரும்.
கடகம்
உங்களின் ராசிக்கு வீட்டில் பொருளாதார நெருக்கடி உண்டாகும். உற்றார் உறவினர்கள் மூலம் மனக்கசப்பு உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்க தாமதம் ஏற்படும். தொழிலில் மந்த நிலை விலகி லாபம் கிட்டும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். வெளி பயணங்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு கடினமான விஷயங்களை கூட துணிவுடனும் துணிச்சலுடனும் செய்து முடிப்பீர்கள். வீட்டில் உறவினர்களால் சுப செய்தி வரும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்கள் மூலம் நல்லது நடக்கும்.
கன்னி
உங்களின் ராசிக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். குழந்தைகளும் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். ஆடை ஆபரண பொருட்கள் சேர்க்கை இருக்கும். சுப காரியங்களில் இருந்த முயற்சி நல்லதை கொடுக்கும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்க வாய்ப்பு இருக்கும்.
துலாம்
உங்களின் ராசிக்கு வீட்டில் பிரச்சனைகள் விலகி சந்தோஷம் பெருகும். குழந்தைகள் மூலம் பெருமை உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் வியாபாரம் அமோகமாக காணப்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மனக்குழப்பம் உண்டாகும்.வீட்டில் இருப்பவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். தொழிலில் பெரிய முதலீடுகளை தவிர்த்துங்கள். சுபகாரியங்களை தவிர்க்கவும். சில விஷயங்களில் கவனம் கொள்ளுங்கள் அதுவே நல்லது.
தனுசு
உங்களின் ராசிக்கு குழந்தைகளால் வீட்டில் பொருளாதார நிலை உண்டாகும். புதிய பொருட்களை வாங்கும் ஆர்வம் கூடும்.வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழிலில் இருந்த போட்டி பொறாமை விலகும். தொழிலில் திறமைக்கேற்ற மேலதிகாரிகளால் பாராட்டைப் பெறுவீர்கள். வருமானம் இரட்டிப்படையக்கூடும்.
மகரம்
உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செலவு உண்டாகும். உடல் ஆரோக்கிய நிலை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.தொழிலில் பெரிய மனிதர்களின் ஆதரவு நல்ல பலனைக் கொடுக்கும். தொழில் விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிட்டும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு வரவை விட செலவு அதிகரிக்கும்.உத்தியோகத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சனை வரும். புதிய முயற்சிகள் எடுப்பதற்கு வீட்டில் ஆதரவு கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகையால் வீட்டில் பண நெருக்கடி உருவாகும்.
மீனம்
உங்களின் ராசிக்கு தொழிலில் பணவரவு சுமாராக தான் இருக்கும். சுப காரியங்களில் தாமத நிலை உருவாகும். தொழிலில் சக ஊழியர்கள் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் கூட்டாளிகளின் ஆலோசனை லாபத்தை கொடுக்கும். கடன் தொல்லை நீங்கும். வீட்டில் ஆதரவு கிடைக்கும்.