Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (06-01-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம்

06-01-2022, மார்கழி 22, வியாழக்கிழமை, சதுர்த்தி திதி பகல் 12.29 வரை பின்புவளர்பிறை பஞ்சமி.

அவிட்டம் நட்சத்திரம்காலை 07.11 வரை பின்பு சதயம் பின்இரவு06.20 வரை பின்பு பூரட்டாதி.

சித்தயோகம்காலை 07.11 வரை பின்பு மரணயோகம்.

நேத்திரம் – 0.

ஜீவன் – 1/2.

மாத சதுர்த்திவிரதம்.

விநாயகர் வழிபாடு நல்லது.

புதியமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00,

எம கண்டம்- காலை 06.00-07.30,

குளிகன் காலை 09.00-10.30,

சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

இன்றைய ராசிப்பலன் –  06.01.2022

மேஷம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை கூடும். உறவினர்கள் வழியாக அனுகூலங்கள் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை தரும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி சுமை குறையும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு நீங்கள் உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் பண நெருக்கடி உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.

கடகம்

உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்பட்டு மனகுழப்பத்துடன் இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். முடிந்தவரை பயணங்களை தள்ளி வைக்கவும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்துசேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

கன்னி

உங்களின் ராசிக்கு உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் லாபகரமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். கொடுத்த கடன்கள் வசூலாகும். புதிய பொருட்கள் வீடுவந்து சேரும்.

துலாம்

உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். வேலையில் மேலதிகாரிகளின் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அனுகூலமான பலனை அடையலாம்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்களால் அலைச்சல் உண்டாகும். அக்கம்பக்கத்தினரை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். கடன்கள் குறையும்.

தனுசு

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு தெம்பை கொடுக்கும். தொழில் ரீதியாக பொருளாதார நிலை உயரும். வெளிவட்டார நட்பு நன்மை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

மகரம்

உங்களின் ராசிக்கு நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறுதொகை செலவிட நேரிடும். புத்திர வழியில்வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். வழக்கு ரீதியாக சாதகமான பலனை பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கும்பம்

உங்களின் ராசிக்கு ஆனந்தமான செய்திவந்து சேரும். சுபமுயற்சிகளில் அனுகூலப்பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வேலையில் பணிச்சுமை குறையும்.

மீனம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். உடன் பிறந்தவர்களால் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

Categories

Tech |