ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு கவலைகள் அதிகரிக்கும் நாளாக அமையவிருப்பதால் தன்னம்பிக்கையுடன் இருப்பது நல்லது. உற்றார் மற்றும் உறவினர்களின் ஆதரவு தகுந்த சமயத்தில் உங்களுக்கு கிடைக்கும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு லாபகரமான நாளாக இன்றைய நாள் அமையும். குடும்பத்தில் ஒற்றுமைக்குறைவு ஏற்பட்டாலும் உங்களின் பொறுமையால் அதைச் சமாளித்து விடுவீர்கள். புதிய விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பழைய பாக்கிகளை சாதுரியமாகப்பேசி வசூலித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல் உண்டாகலாம். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.