மீனம் ராசி அன்பர்களே..!
இன்று இஷ்டதெய்வ நம்பிக்கையுடன் பணிபுரிவீர்கள்.
நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி எளிதாக கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். முன்னேற்ற சூழ்நிலை ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்ளக் கூடிய சூழல் ஏற்படும். பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அனைத்து வகையிலும் தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உறவினர்களின் வருகை இருக்கும். செலவினை கட்டுப்படுத்த வேண்டும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.
தந்தையின் உடல்நலத்தில் கவனம் கொள்ளுங்கள். காதலில் உள்ளவர்கள் பொறுமையாகவும் நிதானமாகவும் செயல்பட வேண்டும். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். சுமுகமான உறவை நீட்டிப்பது நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அண்ணதானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்ல நாளாக அமையும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்.