மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு பதட்டமான சூழ்நிலை காணப்படும். இந்த சூழ்நிலையை சமாளிக்க உங்களின் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துங்கள். உத்தியோக சூழ்நிலை இன்று உங்களுக்கு சாதகமாக இருக்காது.
சக பணியாளர்களிடம் கவனமாக பழகுங்கள், அவர்களால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப பிரச்சனை காரணமாக சில தொல்லைகள் ஏற்படும். உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்துவிடுங்கள். இன்று உங்களின் துணையாருடன் வெளிப்படையாக பேசுங்கள். இதனால் பிரச்சினைகளை சுமூகமாக தீர்க்க முடியும். மேலும் இன்று உங்களின் துணையுடன் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ள முடியும். செலவுகள் அதிகரித்து காணப்படும். இன்று நிதி நிலைமையை சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும். அஜீரணக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் சரியான நேரத்தில் உணவு மேற்கொள்வது நல்லது. மாணவ மாணவியர்களுக்கு இன்று விளையாட்டு மற்றும் கேளிக்கையில் மனம் ஈடுபடும். நண்பர்களிடத்தில் கவனமாக இருப்பது நல்லது. நீங்கள் நரசிம்ம வழிபாடு செய்வது நல்லப்பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 8.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.