Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (21-01-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!?

நாளைய  பஞ்சாங்கம்

21-01-2022, தை 08, வெள்ளிக்கிழமை, திரிதியை திதி காலை 08.52 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி.

 மகம் நட்சத்திரம் காலை 09.43 வரை பின்பு பூரம்.

 மரணயோகம் காலை 09.43 வரை பின்பு சித்தயோகம்.

 நேத்திரம் – 2.

 ஜீவன் – 1.

 சங்கடஹர சதுர்த்தி விரதம்.

 விநாயகர் வழிபாடு நல்லது.

 தனிய நாள்.

 புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – பகல் 10.30-12.00,

 எம கண்டம்-  மதியம் 03.00-04.30,

 குளிகன் காலை 07.30 -09.00,

 சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

நாளைய ராசிப்பலன் –  21.01.2022

மேஷம்

உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் கூட்டாளிகளால் சில நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சுப காரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றலாம். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையக்கூடும். வேலையில் பனிச்சுமை அதிகமாகும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். மதி நுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.

மிதுனம்

உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோக ரீதியாக புதிய நபரின் அறிமுகம் கிட்டும். வருமானம் அதிகரிக்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சினைகள் குறையும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பழைய பாக்கிகள் பைசலாகும்.

கன்னி

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை ஏற்படும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். நண்பர்களுடன் மனக்கசப்பு உண்டாகலாம். நெருங்கியவர்கள் உதவியுடன் பண நெருக்கடிகளை சமாளிக்க முடியும். அயராத உழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

துலாம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செய்வீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரியம் கைகூடும்.

தனுசு

உங்களின் ராசிக்கு உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். சகோதர சகோதரி வழியில் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவ பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது.

வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.

மகரம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை தவிர்க்கவும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நிதானம் வேண்டும். வீண் வாக்குவாதங்களை குறைக்கவும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்

உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் சுப செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிட்டும். பணகஷ்டம் குறையும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள்.

Categories

Tech |