Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (23-01-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

23-01-2022, தை 10, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமிதிதி காலை 09.12 வரை பின்பு தேய்பிறைசஷ்டி.

உத்திரம் நட்சத்திரம் பகல் 11.09 வரைபின்பு அஸ்தம்.

அமிர்தயோகம் பகல் 11.09 வரை பின்பு சித்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 0.

சஷ்டி விரதம்.

முருக வழிபாடுநல்லது.

சுபமுகூர்த்த நாள். சுப முயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00,

எம கண்டம் – பகல் 12.00 – 01.30,

குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,

சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.

நாளைய ராசிப்பலன் –  23.01.2022

மேஷம்

உங்களின் ராசிக்கு வீண் செலவுகள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்வது நல்லது. பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெண்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் பணப் பிரச்சினைகள் ஏற்படும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே சிறு சிறு மன ஸ்தாபனங்கள் ஏற்படலாம். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

கடகம்

உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். மனைவிவழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியான பிரச்சினைகள் சற்றுகுறையும். புதிய பொருட்கள் வீடு வந்துசேரும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடினாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறுதொகையை செலவிட நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்கள் உங்கள் குணிந்து நடந்து கொள்வார்கள். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும்.

கன்னி

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுப செய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்புகிடைக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

துலாம்

உங்களின் ராசிக்கு தொழில் வியாபார ரீதியாக சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம். வெளியிடங்களில் கவனம் தேவை. வீட்டுதேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உறவினர்களால் அனுகூலம் பலன் கிடைக்கும்.

தனுசு

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் வந்து சேரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வராத கடன்கள் வசூலாகும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகைகைக்கு கிடைப்பதில் கால தாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடனும் பொறுமையுடனும் இருப்பது நல்லது.

மீனம்

உங்களின் ராசிக்கு உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலம் பலன் கிட்டும்.

Categories

Tech |