விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று வருத்தங்கள் உண்டாகும்.
மனதிற்குள் பாரம் அதிகரிக்கும். நீங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும். முயற்சியினை அதிகப்படுத்த வேண்டும். இன்று நண்பர்களை விமர்சிக்க வேண்டாம். குறைகள் ஏதும் கூறவேண்டாம். தொழில் வியாபாரத்திலுள்ள அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். பணியாளர்களிடம் அன்பாக நடந்துக் கொள்ளுங்கள். பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். கடன் வாங்கக்கூடிய சூழல் உண்டாகும். தாயின் மூலம் பெண்களுக்கு முன்னேற்றமான சூழல் அமையும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். தேவையில்லாத விஷயங்களில் நாட்டம் செலுத்த வேண்டாம். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். கருநீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 4.
அதிர்ஷ்டமான நிறம்: கருநீலம் மற்றும் மஞ்சள் நிறம்.