துலாம் ராசி அன்பர்களே..!
இன்று மனதில் ஞானம் நிறைந்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள்.
தெரிகின்ற அனுபவம் புதுவிதமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி மிகச்சிறப்பாக இருக்கும். சிலரது செயல் மனதிற்கு வருத்தத்தை கொடுக்கும். பணவரவு சுமாராகதான் இருக்கும். தொழில் தொடர்பாக அலைய வேண்டியதிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரியத்தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். பணி காரணமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். பயணங்களின் பொழுது அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். சரியான உணவை உட்கொள்ள வேண்டும்.
ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சக நண்பர்களுடன் பேசும் பொழுது எச்சரிக்கையுடன் பேசவேண்டும். கேலி மற்றும் கிண்டல் பேச்சுக்கு இடங்கொடுக்க வேண்டாம். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பெண்கள் அக்கம்பக்கத்தினரிடம் கவனத்துடன் நடந்துக்கொள்ள வேண்டும். வீண் பேச்சுக்களைத் தவிர்த்தால் நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் கவனம் வேண்டும். முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.