ரிஷபம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் ராசிக்கு கணவன் மனைவிக்கு இடையில் அன்பு அதிகரிக்கும்.
வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது மூலம் அலைச்சல் மற்றும் டென்ஷன்களை குறைத்துக் கொள்ள முடியும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபங்களை தடையின்றி பெறமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடை மற்றும் தாமதத்திற்குப் பின் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை பெற முடியும். மாணவ மாணவியர்கள் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்குவார்கள். நீங்கள் அம்மன் வழிபாடு மற்றும் விஷ்ணு வழிபாடு செய்வது நன்மையை கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.