ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் செயல்களில் கூடுதல் கவனம் வேண்டும்.
முக்கிய செலவிற்கு கடன் வாங்க நேரிடும். குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சனையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுப காரிய சம்பந்தமான பேச்சுக்கள் நடக்கும். திருமணம் போன்ற காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மதிப்பும் மரியாதையும் கூடும். இன்று முன்னேற்றமான நாளாக அமையும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
காதலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும். கணவன் மனைவி இருவருக்கும் அன்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு விளையாட்டு துறையில் ஆர்வம் அதிகரிக்கும். சிவபெருமான் வழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.