மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று எதிர்கால நலனில் அக்கறை கொள்ளும் நாளாக இருக்கும்.
நண்பரின் ஆலோசனை பயனளிக்கும். அதிக பணவரவு ஏற்படும். எல்லா கஷ்டங்களும் இன்று நல்லபடியாக நீங்கும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். தைரியம் அதிகரிக்கும். வேலையில் பொறுப்புகள் அதிகரித்து காணப்படும். தேவையற்ற மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்துச் செல்வதன் மூலம் பிரச்சனைகள் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
யாரையும் நம்ப வேண்டாம். பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். கணவன் மனைவி இருவருக்கும் சுமுகமான நாளாக அமையும். குடும்பத்திலும் கலகலப்பான சூழல் காணப்படும். சிவபெருமான் வழிபாடு செய்வதன் மூலம் மனதிற்கு நிம்மதி ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.