சிம்மம் ராசி அன்பர்களே..!
பிரச்சனைகளில் சுமுகமான தீர்வுகள் ஏற்படும்.
தொழில் வியாபாரத்தில் வெற்றிப்பெற்று பயனடைவீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். போட்டிகள் குறையும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்பிற்கு ஏற்ப நல்லபலன் அமையும். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு காணப்படும். தனவரவு தாராளமாக அமையும். சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். மனதில் குழப்பங்கள் காணப்படும். இறை வழிபாட்டுடன் அனைத்தையும் எதிர்கொள்ளுங்கள், வாழ்க்கையில் உயர்வு ஏற்படும். கணவன் மனைவி இருவரும் உரையாடும் போது நிதானத்தை வெளிப்படுத்துங்கள். கோபமான பேச்சை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். சிவபெருமான் வழிபாடு மனதிற்கு நிம்மதியளிக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3.
அதிர்ஷ்டமான நிறம்: இளம் மஞ்சள் நிறம்.