மகரம் ராசி அன்பர்களே..!
இன்று உடன் பிறந்தோரின் ஒத்துழைப்பு இருக்கும்.
சகோதரர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். வேண்டியவற்றையும் வாங்கிக் கொடுப்பீர்கள். புதிய நண்பர்களின் வருகை உண்டாகும். நண்பர்களுக்கு வேண்டியதையும் வாங்கிக் கொடுப்பீர்கள். மனைவியின் உதவியால் மனம் மகிழ்வீர்கள். பொருள் சேர்க்கை உண்டாகும். செலவுகள் அதிகமாக இருக்கும். வரவு வருவதில் காலதாமதம் ஏற்படும். கடன்கள் வாங்க வேண்டாம். காரியத்தில் தாமதம் ஏற்படும்.
வீண் கவலையை தவிர்க்க வேண்டும். காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். மாணவர்கள் தீர ஆலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும். பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு முடிவெடுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெளிர் நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீலம் மற்றும் வெள்ளை நிறம்.