கன்னி ராசி அன்பர்களே..!
இன்று கம்பீரமாக பேசி சில காரியங்களை சாதித்து விடுவீர்கள்.
பெற்றோர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பார்கள். இன்று கட்டுப்பாட்டுடன் எந்தவொரு வேலையையும் செய்ய வேண்டிய நாளாக இருக்கும். உதிரி வருமானங்கள் வந்துச்சேரும். மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்பப் பெரியவர்களின் பாராட்டுகளை பெறக்கூடும். பயணத்தால் நற்பலன் உண்டாகும். உங்களுக்கு மிகவும் வேண்டிவரை விட்டு பிரியவேண்டிய சூழல் இருக்கும். மாற்று மதத்தினரின் உதவிகளும் கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு சீராக இருக்கும். போட்டிகள் குறையும். புதிய முயற்சிகளில் ஈடுபடத் தூண்டும். பெண்களுக்கு மனக்கவலை அவ்வப்போது ஏற்படும். பெண்கள் சமையல் மேற்கொள்ளும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அதேபோல் அவர்கள் பண விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். மாணவக் கண்மணிகள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றையநாள் நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 3.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.