Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! கவலைகள் தீரும்..! பணவரவு சிறப்பாக இருக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..!
இன்று பொறுமையாக இருந்து வேலையை மேற்கொள்ள வேண்டும்.

தன்னம்பிக்கையை இழக்க வேண்டாம். லட்சிய நோக்குடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் திருப்திகரமான முன்னேற்றம் இருக்கும். லாபம் கூடும். பிள்ளைகளுக்கு விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். கடன் தொல்லை குறையும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். கேட்ட இடத்தில் பணஉதவி கிடைக்கும். செய்யும் வேலையில் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். மனக்கவலை ஏற்படும். சந்தோசமாக இருக்க இதனை கைவிட வேண்டும்.

தாய் தந்தையிடம் கோபப்படாமல் நடந்துக்கொள்ள வேண்டும். அவர்களிடம் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பொன், பொருள் மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவி இருவரும் கலந்து ஆலோசித்து எந்தவொரு முடிவும் எடுக்க வேண்டும். மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக முயற்சி செய்து பாடங்களைப் படிக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர்பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வருவது நல்ல பலனைக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |