Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! வாக்குவாதம் ஏற்படும்..! மரியாதை தேவை..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று வாக்குறுதிக்கு மாறாக சிலர் உங்களிடம் நடந்துக் கொள்வார்கள்.

பணஉதவிக் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். சொல்லை செயலாற்றுவதில் சிக்கல்கள் ஏற்படும். சில நபர்கள் உங்களுக்குத் தடையாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பார்கள். உணவு விஷயங்களில் கவனம் தேவை. தெரியாதவர்களிடம் நெருங்கிக்கொண்டு பேசவேண்டாம். உத்தியோகஸ்தர்கள் தேவையில்லாத இடங்களில் சந்திக்க நேரிடும். கூடுதல் பொறுப்புகள் கிடைப்பதால் அதிகநேரம் வேலை பார்க்க வேண்டியதிருக்கும்.

தேவையில்லாத பயணங்கள் ஏற்படும். டென்ஷன் அதிகரிக்கும். தேவையில்லாத முன்கோபம் உண்டாகும். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். குடும்ப பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு செயல்களில் ஈடுபடுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும்.அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வருவது நல்ல பலனைக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |