Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! வரன்கள் தேடிவரும்..! நிம்மதி பிறக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..!
இன்று குறை சொன்னவர்கள் கூட பாராட்டுவார்கள்.

பிரிந்து சென்றார்கள் பிரியமுடன் வந்து சேருவார்கள். மருத்துவ செலவுகள் குறைந்து மனதில் நிம்மதி ஏற்படும்.
இன்று புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் நேரம் பணிப்புரிவீர்கள். இன்று நீங்கள் வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். பணவரவு சராசரியளவில் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கைகூடும். எந்தவொரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுத்த வேண்டும்.

பெண்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமையற்ற நிலையினால் நிம்மதி குறையும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கும். தேவையில்லாத குழப்பங்களுக்கு இடங்கொடுக்க வேண்டாம். சக பணியாளர்களுக்கு வேண்டியதை செய்துக் கொடுப்பீர்கள். பயணங்களால் எண்ணற்ற புதிய அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். விவசாயத் துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். மாணவர்களுக்கு சிறப்பான கல்வி அமையும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும்.அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வருவது நல்ல பலனைக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் வெளிர் நீல நிறம்.

Categories

Tech |