Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (14-10-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

14-10-2020, புரட்டாசி 28, புதன்கிழமை, துவாதசி திதி பகல் 11.51 வரை பின்பு தேய்பிறை திரியோதசி.

பூரம் நட்சத்திரம் இரவு 08.41 வரை பின்பு உத்திரம்.

நாள் முழுவதும் அமிர்தயோகம்.

நேத்திரம் – 0.

ஜீவன் – 1/2.

பிரதோஷ விரதம்.

சிவ வழிபாடு நல்லது.

 

இராகு காலம் மதியம் 12.00-1.30,

 எம கண்டம் காலை 07.30-09.00,

 குளிகன் பகல் 10.30 – 12.00,

 சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

நாளைய ராசிப்பலன் –  14.10.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு பணப் பிரச்சனை அதிகமாகும். செலவுகள் சமாளிக்க கடன் வாங்க கூடும். உதவி எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கும். உத்தியோக ரீதியான முயற்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். உடன் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்லுங்கள் அதுவே நல்லது.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு வீட்டில் நிம்மதி இல்லாத சூழ்நிலை உருவாகும். பெரியவர்களிடம் கருத்துவேறுபாடு உண்டாகும். தொழிலில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் லாபம் பெருகும். தொழிலில் சக ஊழியர்களிடம் ஒத்துழைப்பு உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் அனுகூலம் கிட்டும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் சுறுசுறுப்பாக செய்வீர்கள். குழந்தைகளால் ஏற்பட்ட மன சங்கடம் அகலும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கூடும்.உத்யோகத்தில் இருப்பவர்களின் திறமை மேலதிகாரிகளால் பாராட்ட பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வருமானம் கூடும்.

கடகம்

உங்களின் ராசிக்கு பொருளாதார ரீதியில் நெருக்கடி ஏற்படும். உடன் இருப்பவர்களால் வீண் பிரச்சனை உண்டாகும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். வீட்டில் இருப்பவர்களிடம் கருத்துவேறுபாடு நீங்கும். தொழில் ரீதியாக கொடுக்கல் வாங்கலில் கவனம் செலுத்துங்கள்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு எந்த செயலையும் நம்பிக்கையாக செய்து முடிப்பீர்கள். பெரியவர்களின் நட்பு கைகூடும். நண்பர்களின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் விலகி ஒற்றுமை கூடும்.தொழிலில் மறைமுகமாக இருந்த எதிர்ப்புகள் அனைத்தும் நீங்கும்.

கன்னி

உங்களின் ராசிக்கு உடல் நிலையில் சிறு பிரச்சனை உண்டாகும். குழந்தைகள் மூலம் வீண் விரயம் ஏற்படும். தொழிலில் உடன் இருந்தவர்களிடம் கருத்து வேறுபாடு அகலும்.தொழில் ரீதியில் வெளியூர் பயணம் செல்ல நேர்ந்தாலும் அனுகூலம் உண்டாகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.உற்றார் உறவினர்களால் எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலில் சிலருக்கு புதிய பொறுப்பு அமையும். பூர்வீக சொத்துகளில் உள்ள பிரச்சனை விலகி நலம் பெறுவீர். சுபகாரியங்கள் கைகூடி வரும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு குழந்தைகள் மூலம் மன மகிழ்ச்சியான நிகழ்ச்சி உண்டாகும். வீட்டில் அனைவருடனும் வெளியூர் பயணம் செல்லக்கூடும். சிவ காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தொழிலில் புதிய மாற்றம் உண்டாகும். தொழிலில் இருந்த மந்தநிலை நீங்கும். லாபம் பெருகும். சேமிப்பு பணம் உயிரும்.

தனுசு

உங்களின் ராசிக்கு உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள் அதுவே நல்லது.எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்க இடையூறு இருக்கும். தொழில் ரீதியில் வெளியூர் பயணம் செல்ல அனுகூலம் கிட்டும்.தேவையில்லாத செலவுகளை குறைத்துக்கொண்டால் வீட்டில் பணப் பிரச்சனை தீரும்.

மகரம்

உங்களின் ராசிக்கு உடல் நிலையில் சிறு பாதிப்பு உண்டாகும். மற்றவர்கள் மீது கோபம் கொள்வீர்கள். சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் நிதானத்துடன் செயல்படவேண்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளை இப்போது எடுக்க வேண்டாம்.

கும்பம்

உங்களின் ராசிக்கு குழந்தைகளால் அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அரச ரீதியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் முன்னேற்றம் அடையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். பழைய பாக்கி அனைத்தும் வசூலாகும்.

மீனம்

உங்களின் ராசிக்கு எந்த முயற்சி எடுத்தாலும் வெற்றியை கொடுக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டங்களை சந்திப்பீர்கள். குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் காண்பீர். வீட்டில் அமைதி நிலவும்.உத்தியோகம் ரீதியில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கு. புதிய பொருட்களை வாங்க ஆர்வம் கொள்வீர்கள்.

Categories

Tech |