மகரம் ராசி அன்பர்களே..!
இன்று மனதில் அமைதி வேண்டும்.
இறைவழிபாடு கண்டிப்பாக வேண்டும். தனலாபம் ஏற்படுவதில் காலதாமதம் உண்டாகும் கவனத்துடன் எந்த காரியத்திலும் ஈடுபட வேண்டும். அலட்சியம் காட்ட வேண்டாம். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். சிரமம் தரக்கூடிய பணியை செய்ய வேண்டாம். முயற்சிகள் செய்தால் காரியத்தில் வெற்றி உண்டாகும். இறை வணக்கத்துடன் இன்றைய நாளை தொடங்க வேண்டும்.
எடுக்கும் முயற்சிகள் காலதாமதத்துடன் நடந்து முடியும். தேவையில்லாத மனக்குழப்பம் உண்டாகும். சிந்தனை மேலோங்கும். மற்றவர்களின் விமரிசனத்திற்கு ஆளாவீர்கள். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். குடும்ப பெரியவர்களிடம் அன்பாக நடந்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத பேச்சைத் தவிர்க்க வேண்டும். தேவையில்லாத பிரச்சினைகளுக்கு இடங்கொடுக்க வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.