கன்னி ராசி அன்பர்களே:
இன்று உங்களின் மனம் அமைதியைத்தேடி செல்லும்.
இன்று முதல் உங்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை என்பது வேண்டும். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் ஓரளவு நல்லபடியாக முடியும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். அந்த நட்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பண விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து எதுவும் போட வேண்டாம்.
இன்றைய நாள் உங்களுக்கு கடுமையான சூழல் நிலவும். உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். தாழ்வு மனப்பான்மை அவ்வப்போது ஏற்படும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். கணவன் மனைவி இருவரும் மனம்விட்டுப் பேசவேண்டும். எந்தவொரு விஷயமாக இருந்தாலும் தீர ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். குடும்பத்தில் அமைதி உண்டாக பெண்களுடைய கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். பெண்கள் சமையல் மேற்கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். இன்றைய நாளை நீங்கள் இறைவழிபாட்டுடன் தொடங்கினாள் நன்மையாக இருக்கும். காதலில் உள்ளவர்கள் சற்று பொறுமை காக்க வேண்டும். இன்று நீங்கள் எந்தவொரு விஷயத்திலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளமஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளமஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளமஞ்சள் நிறம்.