Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! அலைச்சல் அதிகரிக்கும்..! நல்லது நடக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது.

அலைச்சல் அதிகரிக்கும். அரசு காரியங்கள் இழுபறியாகதான் நடந்து முடியும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அனுசரித்து செல்லுங்கள். தொழிலை விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளிப் போடுவது நல்லது. பெரிய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டாம். பொறுமை காக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களின் பணியில் கவனம் செலுத்துவது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களால் வீன் பிரச்சனை மற்றும் குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை தோன்றும். குழந்தைகளுடன் பேசும் பொழுது அன்பை வெளிப்படுத்துங்கள். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். இன்று மாணவ மாணவியர்கள் கவனம் எடுத்து பாடங்களை படிக்கவேண்டும். சக மாணவர்களுடன் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இள மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளமஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு, சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்லபடியாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 4.
அதிர்ஷ்டமான நிறம்: இளமஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |