கன்னி ராசி அன்பர்களே..!
நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது உங்களுக்கு நல்லது. வெளியிடங்களுக்கு சென்று வருவதன்மூலம் மனஅமைதி கிடைக்கும். பணியில் வெற்றிபெற மிகுந்த முயற்சி எடுக்க வேண்டும்.
இன்று உங்களின் பணிகளை திட்டமிட்டு முறைப்படி ஆற்ற வேண்டும். உங்களின் துணையுடன் விவாதங்களை ஏற்பட வாய்ப்புள்ளது. உறவில் நல்லிணக்கத்தை பராமரிக்க விஷயங்களை சகஜமாக எடுத்துக்கொள்வது நல்லது. இன்று வரவும் செலவும் இணைந்தே காணப்படும். உங்களின் பணத்தை முறையாக செலவுச்செய்யும் நிலை காணப்படாது. சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளுங்கள். இது உங்களை ஆரோக்கியத்துடன் வைத்திருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றநிலை காணப்படும். கூடுதல் முயற்சி மேற்கொண்டால் நல்லபலனைப் பெறலாம். நீங்கள் சிவவழிபாடு மேற்கொண்டால் நல்லப்பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.