கடகம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் ராசிக்கு வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும்.
இன்று பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகளால் எதையும் சமாளிக்க முடியும். பூர்வீக சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை எதிர் கொள்கிறார்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்களின் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவ மாணவியர்கள் கல்வியில் உயர்வடைய அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்:1.
அதிர்ஷ்டமான நிறம்: காவி நிறம்.