மேஷம் ராசி அன்பர்களே…! கொடுத்த வாக்குறுதிகளை மீறி சிலர் மாறுதலாக நடந்து கொள்வார்கள்.
இன்று சில இடங்களில் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். பேச்சு அளவாக பேச வேண்டி இருக்கும். கடந்தகால சிரமம் எல்லாம் படிப்படியாக குறையும். செயல்கள் அனைத்தும் உற்சாகமாக இருக்கும். உபரி பண வருமானம் கண்டிப்பாக கிடைக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு இன்று நடத்தக்கூடும். பெரியவர்களின் பாராட்டு கண்டிப்பாக கிடைக்கும். திருமண சுப காரியங்களில் தடை தாமதம் இருக்கும். மனதில் சஞ்சலம் ஏற்பட்டு பின்னர் சரியாக கூடும். பெண்களுக்கு சுய மரியாதை கூடும். பெண்கள் அழகாக காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
காதல் விஷயங்கள் கண்டிப்பாக கை கொடுக்கும். மாணவர்களுக்கு தைரியம் ஏற்படும். கல்வி மீது அக்கறை இருக்கும். உயர் கல்வியில் சாதிக்க முடியும். அரசு தேர்வுக்காக பயிலும் மாணவர்கள் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே வெள்ளிக்கிழமை என்பதினால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் பச்சை நிறம்.