இன்றைய பஞ்சாங்கம்
15-10-2020, புரட்டாசி 29, வியாழக்கிழமை, திரியோதசி திதி காலை 08.33 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 04.53 வரை பின்பு அமாவாசை.
உத்திரம் நட்சத்திரம் மாலை 05.58 வரை பின்பு அஸ்தம்.
மரணயோகம் மாலை 05.58 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 1/2.
மாத சிவராத்திரி.
சிவ வழிபாடு நல்லது.
கரி நாள்.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன் – 15.10.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள் இருக்கும். வெளியூர் பயணங்கள் செல்லக்கூடும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு வீட்டில் பண வரவு இருந்தாலும் செலவும் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். நண்பர்களின் ஆல் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். புதிய முயற்சிகளால் வீட்டில் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு தொழிலில் ஈடுபாடு குறையக்கூடும். சுப காரியங்களில் தடை உண்டாகும். வீட்டில் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். உத்தியோகத்தில் வேலை செய்வார்கள் பொறுப்பாக இருப்பார்கள். பெரியவர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும்.
கடகம்
உங்களின் ராசிக்கு பொருளாதாரம் சீராக இருக்கும். வீட்டில் சுப செய்திகள் கைகூடும். உறவினர்களின் மூலம் அனுகூலம் கிட்டும். நண்பர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பேரும் புகழும் மேலோங்கும். உத்தியோக உயர்வு கிடைக்க பெறுவீர்கள். வருமானம் பெருகும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்க காலதாமதம் ஆகும். தொழிலில் மந்த நிலை உண்டாகும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் நல்லது. நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.
கன்னி
உங்களின் ராசிக்கு நினைத்த காரியங்கள் நல்லபடியாக நிறைவேற்றுவீர்கள். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் உண்டாகும். வீட்டில் அனைவருடனும் வெளியூர் பயணம் செல்லக்கூடும். தொழில் செய்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிரிகள் கூட நண்பராக இருப்பார்கள்.
துலாம்
உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சனை ஏற்படும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையக்கூடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள் அதுவே நல்லது. உத்தியோகத்தில் சிறு மாற்றங்கள் செய்தால் லாபம் உண்டாகும். கடன் பிரச்சனைகள் அகலும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு தன வரவு உண்டாகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.தொழில் ரீதியாக வெளியூர் பயணம் நல்ல லாபத்தைக் கொடுக்கும். பொன்னும் பொருளும் சேர்ப்பீர்கள். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
தனுசு
உங்களின் ராசிக்கு செய்யும் செயல் அனைத்தும் வெற்றியை கொடுக்கும்.வீட்டில் உறவினர் வருகையால் மகிழ்ச்சியான செய்திகள் நடைபெறும். அரசு ரீதியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய தொழில் செய்யும் முயற்சிகளில் ஈடுபாடு உண்டாகும். சுப காரியம் கைகூடி வரும்.
மகரம்
உங்களின் ராசிக்கு உடல் நலம் ரீதியாக தொகை செலவிட செய்யக்கூடும்.குழந்தைகள் மூலம் சிறு சிறு மனக்கஷ்டங்கள் உண்டாகும்.உடன் பிறந்தவர்களை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். பணம் சம்பந்தமாக கொடுக்கல்-வாங்கலில் இருந்துவந்த இடையூறு அனைத்தும் விலகும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு தேவையில்லாத மனக் கவலை உண்டாகும். சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல் ஏற்படும். முகம் தெரியாதவர்களிடம் பேசுவதை தவிர்த்து விடுங்கள். சுபகாரியங்களை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்களில் கவனம் கொள்ளுங்கள்.
மீனம்
உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு வேலைப்பளு நீங்கும். சுபகாரியங்களில் முன்னேற்றம் காண்பீர்கள். தொழிலில் புதிய கூட்டணி இணையும். வருமானம் பெருகி காணப்படும்.