மேஷம் ராசி அன்பர்களே..!
முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவுகள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு கைக்கொடுப்பார்கள். மனதில் இருந்துவந்த சஞ்சன நிலையில் மாற்றம் இருக்கும்.
நெருக்கடிகள் ஓரளவுக்கு குறையும். அரசாங்கம் மூலம் லாபம் ஓரளவுக்கு ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் மூலம் சாதகபலன் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி பொறுத்தவரை சுமுகமான நிலை காணப்படுகிறது. காதலில் உள்ளவர்களுக்கும் இன்று சிறப்புமிக்க நாளாகவே இருக்கிறது. கணவன் மனைவிக்கிடையே அன்பு வெளிப்படும். நீங்கள் அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.