Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! ஆதரவு கிடைக்கும்..! அனுசரணை தேவை..!!

துலாம் ராசி அன்பர்களே..!
இன்று கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு உண்டாகும்.

அதிகாரிகளிடம் பணிவாக நடக்க வேண்டும். கோபத்தைக் குறைத்தால் நன்மை உண்டாகும். நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். மனைவி உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். செலவினை கட்டுப்படுத்துங்கள். தேவையில்லாத சகவாசத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பஞ்சாயத்துக்களில் ஈடுபட வேண்டாம். அறிவுரைகள் எதுவும் சொல்ல வேண்டாம். அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும்.

குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவேண்டும். பெண்களால் முன்னேற்றமான சூழல் உண்டாகும். சில நபர்களுக்கு காதலில் வயப்படகூடிய சூழல் உண்டாகும். சில நபர்களால் தொல்லைகளை சந்திக்க வேண்டியதிருக்கும், அவர்களிடம் வீண் வாக்குவாதங்களில் எதுவும் செய்யாமல் இருக்க வேண்டும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே வெளிப்படுத்த வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். கருநீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: கருநீலம் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |