Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! நினைத்தது நடக்கும்..! தொல்லைகள் நீங்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று உற்சாகத்துடன் செயல்படும் நாளாக இருக்கும்.

வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். நினைத்தது படியே செயல்படுவீர்கள். பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று துணிந்து முடிவெடுப்பதால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். வருங்கால நலன்கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். உத்தியோக உயர்வு எதிர்பார்த்தபடி வந்துசேரும். கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். பணவரவு அதிகரிப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

நினைத்த காரியங்களை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். சமூக அக்கறையுடன் எல்லா விஷயங்களிலும் ஈடுபடுவீர்கள். இன்று தெய்வத்திற்கு சிறு தொகையை செலவிட நேரிடும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவதற்கான திட்டத்தை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். யாருக்கும் அதிகப்படியான உதவிகளை செய்ய வேண்டாம். தேவையில்லாத விஷயங்களை பேசவேண்டாம். ரகசியங்களை பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளமஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளமஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் இன்றைய நாளை சிறப்பான நாளாக மாற்றும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: இளமஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |