Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! கடன்கள் வசூலாகும்..! கவனம் தேவை..!!

கடகம் ராசி அன்பர்களே..!
தொட்ட காரியங்கள் நிறைவேறக்கூடிய நாளாக இருக்கும்.

தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை கொள்வீர்கள். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். மனதில் இனம்புரியாத கவலை ஏற்படும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். வியாபாரத்திற்காக கேட்ட கடன் கைவந்துச் சேரும்.

நிலுவைப்பணம் வசூலாகும். இன்று உங்களுக்கு சிறப்பான தருணங்கள் அமையக்கூடும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு பரிபூரணமாக கிடைக்கும். பேச்சில் நிதானம் தேவை. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெளிர்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |