தனுசு ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் உங்களுக்கு தனவரவு கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் உங்களிடம் பணிந்துச் செல்வார்கள். எதிர்ப்புகள் குறையும், எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.
நண்பர்களின் உதவி நன்மையைக் கொடுக்கும். பேரும், புகழும் ஓங்கி நிற்கும். பெண்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றம் தரும் வகையில் சூழல் அமையும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளிடம் அன்பினை வெளிப்படுத்துங்கள். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். மேற்கல்விகளில் நல்ல வெற்றி வாய்ப்புகள் காணப்படுகிறது. பேசும்பொழுது நிதானம் தேவை. கோபமான பேச்சினை தவிர்த்துவிடுங்கள். காரியங்களில் தடைகள் ஏற்படும். உங்களின் வீட்டினை பராமரிப்பதற்காக செலவு செய்வீர்கள். செலவை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.