மகரம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு பணவரவு தாமதமாகத்தான் வந்துச்சேரும். எதையும் சாதிக்கும் திறமை இன்று ஏற்படும். ஆனால் செலவுகள் அதிகரித்துக் காணப்படும். எந்த ஒரு காரியத்திலும் சாதகப்பலன் பெற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.
பயணங்களின் போதும் கவனம் தேவை. பிரச்சினைகளை பொறுமையுடன் நடத்த வேண்டும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காதீர்கள். மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடுவது மற்றும் பணம் ஏதும் வாங்கிக் கொடுப்பது போன்ற காரியங்களை தவிர்க்கவேண்டும். நீங்கள் பொறுமையாக இருந்தால் இன்றைய நாளை உங்கள் வசம் வைத்துக் கொள்ளலாம். எந்த ஒரு வேலையில் ஈடுபடும் பொழுதும் அக்கறையுடன் செய்யவேண்டும். அலைச்சல்கள் காட்ட வேண்டாம். மாணவ மாணவியர்களுக்கு முன்னேற்றம் தரும் வகையில் கல்வி அமையும். காதலில் இருப்பவர்கள் பேச்சில் கோபமில்லாமல் பேசவேண்டும். அம்மன் வழிபாடு மனதிற்கு நிம்மதி அளிக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.