Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…. “தேவை பூர்த்தியாகும்”… புத்திர வழி பூரிப்பு…!

தனுசு ராசி அன்பர்களே…! இன்று இருந்த இடத்திலிருந்து அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட உங்களின் ராசிக்கு சிறப்பான அமைப்பாகும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேற்றி விட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு புத்திர வழியில் பூரிப்பும் பூர்வீகச் சொத்துகளால் அனுகூலம் உண்டாகும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்டமான எண்: 2

அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்

Categories

Tech |