மீனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும். அஜீரணம் போன்ற பிரச்சினைகள் எழக்கூடும்.
இன்று உங்களுக்கு சந்திராஷ்டம் தினம் உள்ளதால் பொறுமையாக செயல்பட வேண்டும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். யாரிடமும் கோபம் கொள்ள வேண்டாம். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம், வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்துக்கள் எதுவும் போட வேண்டாம். இன்று நீங்கள் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்துக்கொள்வது அவசியமாகும். அனுகூலமான பலன்களை அடைவதற்கு இறைவன் வழிபாடு வேண்டும். பணவரவில் தாமதங்கள் ஏற்படும். புதிய நபர்களால் பிரச்சினைகள் எழக்கூடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 8.
அதிர்ஷ்டமான நிறம்: இளமஞ்சள் நிறம்.