தனுசு ராசி அன்பர்களே..!
முக்கியமான பணிகளை நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படும்.
எவரிடமும் கோபமாக பேச வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். சத்தான உணவு வகைகளை உண்ண வேண்டும். வரவு திருப்தியளிக்கும் வகையில் இருக்கும். நல்லவர்களின் சந்திப்பால் நன்மை உண்டாகும். எந்தவொரு காரியத்தையும் எளிதில் முடித்து வெற்றிக் காண்பீர்கள். மற்றவர்களின் பொறாமைக்கு ஆளாவீர்கள். குடும்பத்திலிருந்துவந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் மாறும்.
அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். இன்று உங்களுக்கு சிறப்புதரும் நாளாக இருக்கும். மனதிலிருந்த துயரம் விலகிச் செல்லும். தேவையில்லாத குழப்பங்கள் விலகிச்செல்லும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். திருமணம் ஆகாதவருக்கு நல்ல வரன்ங்கள் வரக்கூடும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். காதலில் உள்ளவர்களுக்கு சிறப்புமிக்க தருணங்கள் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணியவேண்டும். பிங்க் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பிங்க் நிறம்.