Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (17-10-2020) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

17-10-2020, ஐப்பசி 01, சனிக்கிழமை, பிரதமை திதி இரவு 09.09 வரை பின்பு வளர்பிறை துதியை.

சித்திரை நட்சத்திரம் பகல் 11.51 வரை பின்பு சுவாதி.

மரணயோகம் பகல் 11.51 வரை பின்பு சித்தயோகம்.

நேத்திரம் – 0.

ஜீவன் – 0.

நவராத்திரி ஆரம்பம்.

லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.

 

இராகு காலம் – காலை 09.00-10.30,

  எம கண்டம் மதியம் 01.30-03.00,

 குளிகன் காலை 06.00-07.30,

 சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

 

நாளைய ராசிப்பலன் –  17.10.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். பொருளாதார ரீதியில் பிரச்சனைகள் தீரும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த வங்கிக் கடன் கிட்டும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் மன உறுதியுடன் செய்வீர்கள். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் ஆதரவு இருக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். புதிய பொருட்களை சேர்ப்பீர்கள். கடன் தொல்லை நீங்கும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு செய்யும் செயல்களில் தடை தாமதம் உருவாகும். வீட்டில் பெரியவர்களுடன் மனஸ்தாபம் இருக்கும்.தொழில் செய்பவர்கள் கோபத்தை குறைத்துக் கொண்டு பணியில் கவனத்தைச் செலுத்துங்கள் அதுவே நல்லது. உத்தியோகத்தில் சிறு மாறுதல்களால் லாபம் உண்டாகும்.

கடகம்

உங்களின் ராசிக்கு பொருளாதார நிலையில் நெருக்கடி உண்டாகும். உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சனை வரும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த பணி சுமை தீரும். உத்தியோக ரீதியில் வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றம் உண்டாகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு தொழிலில் மன மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பணவரவு இருக்கும். வீட்டில் தேவை அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும்.

கன்னி

உங்களின் ராசிக்கு வீட்டில் உறவினர்களால் வீண் செலவு வரும். பெரியவர்களின் விரதத்திற்கு ஆளாவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த விதமாக பிரச்சனை வரும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் நல்லது. நண்பர்களின் ஆதரவும் உண்டாகும்.

துலாம்

உங்கள் இராசிக்கு குழந்தைகளால் அலைச்சல் இருக்கும். தொழிலில் சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு உண்டாகும். விட்டுக்கொடுத்து சென்றால் பிரச்சனை தீரும். தொழிலில் லாபகரமாக இருக்கும். நண்பர்களால் அனுகூலம் கிடைக்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு உத்தியோக ரீதியில் பொருளாதார நெருக்கடி உண்டாகக்கூடும்.எந்த முயற்சி எடுத்தாலும் சிறு இடையூறு இருக்கும். வீட்டில் செலவுகள் குறையும். குழந்தைகளுடன் இருந்த கருத்துவேறுபாடு அகலும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் அனுகூலம் கிடைக்கும்.

தனுசு

உங்களின் ராசிக்கு புதுப் பொலிவுடனும் தெம்புடன் இருப்பீர்கள்.தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லக்கூடும். சுபகாரியங்களில் நல்ல நிலை இருக்கும். தொழிலில் உடன் இருப்பவர்களால் வியாபாரத்தில் பிரச்சனைகள் தீரும்.

மகரம்

உங்களின் ராசிக்கு திடீர் செய்தி வரும். சகோதர சகோதரிகள் நட்பாக இருப்பார்கள். உடல்நிலை சீராக இருக்கும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் பிரச்சனைகள் தீரும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்கும். மன மகிழ்ச்சி ஏற்படும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். புதிய பொருட்களை வாங்கும் பொழுது கவனம் செலுத்துங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து கொள்வது நல்லது. சுபகாரியங்களில் அனுகூல பலன் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு வீன் கவலை குழப்பம் உண்டாகும். சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது. பிறரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். தொழில் செய்பவர்களுக்கு உத்தியோகத்தில் கவனம் வேண்டும்.

Categories

Tech |