ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. இன்று அவநம்பிக்கையும், அமைதியின்மையும் காணப்படும். உங்களின் செயல்களில் கவனம் தேவை.
எதிர்மறை எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள். நம்பிக்கையுடன் செயல்பட்டால் அதிகம் சம்பாதிக்கலாம். இன்று அதிகப்பணிகள் காணப்படும். பணியில் நீங்கள் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது, இதனால் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். இன்று நீங்கள் சக பணியாளர்களுடன் உரையாடும் பொழுது கவனமாக இருக்கவேண்டும். இன்று உங்களின் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்துக் கொள்வீர்கள். நிதிவளர்ச்சி இன்று ஏமாற்றத்தை கொடுக்கும். செலவுகள் அதிகமாக காணப்படும். தைரியம் இன்மை காரணமாக என்று அசௌகரியமாக உணர்வீர்கள். இது உங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். நீங்கள் முருகன் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 8.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.