Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! அன்பு வெளிப்படும்..! அலட்சியம் வேண்டாம்..!!

மீனம் ராசி அன்பர்களே…!
இன்று புதியதாக உத்தியோக வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு ஆகியவற்றை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும் அதேபோல வாழ்க்கையில் சில இனிய மாற்றங்கள் இன்று நீங்கள் எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனைத்து விஷயங்களிலும் வெற்றி இருக்கும், ஆனால் பணிச்சுமையும் கொஞ்சம் வீண் அலைச்சலும் இருக்கும் கவனம் கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் எந்தவித பாரபட்சமும் காட்ட வேண்டாம். நண்பரிடம் கவனமாக நடந்து கொண்டால் போதுமானது. உங்களுடைய வேலைகளை நீங்கள் செய்யாவிட்டால் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் கவனம் இருக்கட்டும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம் அதிலும் கவனம் இருக்கட்டும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். எந்த ஒரு காரியத்திலும் அலட்சியமும் காட்ட வேண்டாம். பண விஷயத்தில் சில நெருக்கடிகள் இருக்கும். அந்த நெருக்கடிகளை நீங்கள் சமாளித்து தான் ஆக வேண்டும். ஆனால் நீங்களும் பணவிஷயத்தில் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை எண்ண வேண்டாம்.

பணம் ஒருவர் உங்களிடம் கொடுத்தாலும் சரி நீங்கள் வாங்கினாலும் சரி நீங்கள் சரியாக எட்டிப்பார்த்து வாங்குங்கள். இந்த விஷயங்களில் ரொம்ப கவனமாக இப்போதைக்கு நடந்து கொள்ளுங்கள். புதிய முயற்சிகளில் பெரிய முதலீடுகளை தயவு செய்து பயன்படுத்த வேண்டாம். இப்ப இருக்கக்கூடிய சூழ்நிலையை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல் நடந்து கொண்டாலே போதுமானது. மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும் கல்வியில் ஒரு பயம் இருந்து கொண்டே தான் இருக்கும். இன்று காதலர்கள் எந்த விதத்திலும் முன்னேற்றத்தையே காண்பார்கள். திருமண முயற்சிகளை கண்டிப்பாக மேற்கொள்ளுங்கள். நல்ல விஷயங்களில் முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |