Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! ஆதாயம் கிடைக்கும்..! நன்மை உண்டாகும்..!!

துலாம் ராசி அன்பர்களே…!
இன்று எதிர்பாராத பொருள் வரவுக்கு இடம் உண்டாகும்.

வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சொத்து வகையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். இன்று எதையும் வெற்றிகரமாகவும் செய்து முடிப்பீர்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் இன்று ஆதாயம் ஏற்படும். திடீர் சோர்வு இருக்கும். அடுத்தவரிடம் உங்களது செயல் திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்க்க வேண்டும். மிக முக்கியமாக ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். அனாவசியமாக யாரிடமும் பேச வேண்டாம். அதேபோல் மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை எண்ண வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். நிதி மேலாண்மையில் கவனம் கொள்ள வேண்டும். இன்று யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். யாரையும் தயவுசெய்து குறைகள் ஏதும் சொல்ல வேண்டாம். குடும்பத்தில் உள்ளவரிடம் அன்பாகவே நடந்து கொள்வீர்கள்.

குடும்பத்தாரின் முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். பிள்ளைகளிடம் கொஞ்சம் அன்பாக பேசுங்கள் அவர்களது போக்கில் விட்டுப் பிடிப்பது ரொம்ப நல்லது. திருமண முயற்சிகள் மேற்கொள்பவர்கள் இன்று முன்னேற்றமான சூழல் இருக்கும். சுபசெய்திகள் வீட்டில் வந்து சேரும். சுப நிகழ்வுகளுக்கான பேச்சுவார்த்தை வெற்றியடையும். இன்று காதலர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும்  மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |