தனுசு ராசி அன்பர்களே…! இன்று குடும்பத்தினரிடம் அன்பு பாசம் இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். பணவரவு நன்மையை கொடுப்பதாக இருக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க கூடும். உறவினர்களின் மகிழ்ச்சி விழாவில் கலந்து கொள்வீர்கள்.குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்த வருத்தம் நீங்கும்.
பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் இருந்தால் போதும். வீண் மன சங்கடம் அவ்வப்போது ஏற்படும். தேவையில்லாத மனக் குழப்பம் கொஞ்சம் இருக்கும். பணவரவு கொஞ்சம் நல்ல படியாக தான் இருக்கும். சேமிக்கக்கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். வெளிவட்டாரத்தில் உங்களுடைய புகழ் ஓங்கி இருக்கும்.
ஆனால் பஞ்சாயத்துகளில் கலந்துகொண்டு தயவு செய்து கருத்துக்கள் ஏதும் சொல்ல வேண்டாம். இதை மட்டும் கவனத்தில் கொண்டால் போதும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு சிக்கலும் இல்லை.இருந்தாலும் உணவு விஷயத்தில் மட்டும் சிறிது கட்டுப்பாடு வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாகவே இருக்கும். பிரச்சனைகள் இல்லாமல் சுமுகமாக செல்லும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் நீங்கள் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் நீல நிறம்.