சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாளாக இருக்கும். வீடு, இடம் வாங்கக்கூடிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது ரொம்ப நல்லது. வீண் செலவுகள் அதிகரிக்கும். காரியத்தில் தாமதம் ஏற்படும். உடல் மற்றும் மனச்சோர்வு ஏற்படலாம். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது ரொம்ப நல்லது. தாய் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள். பழைய பாக்கிகள் தாமதத்திற்கு பிறகு வந்துச்சேரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டியதிருக்கும். கணவன்-மனைவிக்கிடையே தேவையில்லாத விஷயத்தால் கருத்து வேற்றுமை ஏற்படும். செலவினை கட்டுப்படுத்த வேண்டும். தேவையான பொருட்களில் மட்டும் முதலீடு செய்யுங்கள். கோபமான பேச்சினை குறைத்துக் கொள்ள வேண்டும். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே கையாள வேண்டும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள் இன்றையநாள் மிகவும் நல்ல நாளாக அமையும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.