துலாம் ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் உங்களுக்கு சற்று மந்தமான நாளாக இருக்கும். உங்களின் சூழ்நிலையைக்கண்டு உணர்ச்சிவசம் படாதீர்கள். இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளல்ல.
பணிகளை திறம்பட செயலாற்ற முடியாது. இன்று உங்களின் பிரியமானவர்களுடன் விவாதத்தில் ஈடுபட நேரலாம். நிலைமை மோசமாகாமல் தடுக்க இந்த வாக்குவாதத்தை தவிர்த்துவிடுவது நல்லது. சற்று விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். நிதிவளர்ச்சி இன்று அவ்வளவு சிறப்பாக இருக்காது. கூடுதலான செலவினங்களை இன்று நீங்கள் சந்திக்க நேரிடும். மருத்துவ செலவிற்காக நீங்கள் பணம் செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். நீங்கள் பைரவ வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.