சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று தெய்வ பக்தியால் மனதில் நிம்மதி கூடும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
புனிதப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த இடையூறுகள் விலகிச் செல்லும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழக்கூடும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.
புதிய வேலை பற்றிய சிந்தனையும் அதிகரிக்கும். பெரியவர்கள் மூலம் காரிய அனுகூலங்களும் ஏற்படும். திறமை வெளிப்படும். காரியத்தில் நிதானமான போக்கு காணப்படும். மனம் தைரியமாக இருக்கும். சுயசிந்தனை அதிகரிக்கும். இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். திருமணத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
மேற்கல்விக்கான முயற்சியில் வெற்றிக் கிட்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம்பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: இளம்பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.