நாளைய பஞ்சாங்கம்
19-10-2020, ஐப்பசி 03, திங்கட்கிழமை, திரிதியை திதி பகல் 02.08 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி.
விசாகம் நட்சத்திரம் காலை 06.08 வரை பின்பு அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 03.52 வரை பின்பு கேட்டை.
மரணயோகம் காலை 06.08 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 1/2.
சுபமுகூர்த்த நாள்.
சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
நாளைய ராசிப்பலன் – 19.10.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு மன உளைச்சல் தேவையில்லாத டென்ஷன் இருக்கும். சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் காரியங்களில் தாமதம் இருக்கும். சிவன் நிகழ்சிகளை தள்ளி வைப்பது மிக நல்லது.தேவையில்லாத இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள் அதுவே நல்லது.
ரிஷபம்
உங்கள் இராசிக்கு பொருளாதாரம் சீராக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி விரும்புவீர்கள. வீட்டில் மகிழ்ச்சி இருக்கும்.தொழில் ரீதியில் எடுக்கும் முயற்சி அனுகூலத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கொடுத்த கடன் அனைத்தும் வசூலாகும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு வீடு தேடி நல்ல செய்தி வரும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் சரளமான நிலை அடையும். தொழில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். ஆடை ஆபரணம் வாங்கும் ஆர்வம் இருக்கும்.
கடகம்
உங்களின் ராசிக்கு தொழிலில் தேவையில்லாத பிரச்சனை இருக்கும். உடல் நலத்தில் வயிறு சம்பந்தமான பாதிப்பு இருக்கும். தொழிலில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்பு.நண்பர்களின் உதவியால் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு வீட்டில் பொருளாதார நிலை நெருக்கடியில் இருக்கும். உடல் நிலைகள் சுறுசுறுப்பில்லாமல் இருப்பீர்கள்.எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி ஏமாற்றத்தை கொடுக்கும். உத்யோகத்தில் சில மாற்றங்களால் லாபம் அடையும். உறவினர்கள் ஆதரவு கிடைக்கும்.
கன்னி
உங்களின் ராசிக்கு பொருளாதாரநிலை சீராக இருக்கும். வீட்டில் கணவன் மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் விலகும். தொழிலில் எதிரிகளால் இருந்த தொல்லை நீங்கி லாபம் பெருகும். வெளியூர் பயணம் செல்லக்கூடும். தொழிலில் பணிச்சுமை நீங்கும்.
துலாம்
உங்களின் ராசிக்கு எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத செலவுகள் இருக்கும். வெளி பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுபவம் கிடைக்கும். பெரியவர்களின் ஆதரவு மகிழ்ச்சியைத் தரும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு தன வரவு இருக்கும். சுப காரியம் கைகூடும். வீட்டில் குழந்தைகளால் பெருமை உண்டாகும்.எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு
உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை குறைந்து இருக்கும். சிவ காரிய முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் நல்ல பலனை அடைவீர்.உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் நல்லது நடக்கும். குழந்தைகள் மூலம் சுப செய்தி இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.
மகரம்
உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் உற்சாகத்துடன் செய்வீர்கள். வீட்டில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் இருக்கும். வேலை செய்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு இருக்கும். தொழில் ரீதியில் எடுக்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும். கடன்கள் வசூலாகும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியடையும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செலவு இருக்கும். உற்றார் உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி வீடு வந்து சேரும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். தெய்வ வழிபாடு இருக்கும். நண்பர்களால் பிரச்சனை நீங்கும். புதிய மாற்றங்கள் உண்டாகும்.
மீனம்
உங்களின் ராசிக்கு மருத்துவ செலவு இருக்கும்.எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஆகும். எந்த விஷயங்களிலும் கவனமாக இருங்கள்.உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் தீரும். உறவினர்கள் உதவியால் வீட்டில் பிரச்சினைகள் தீரும்.