விருச்சிகம் ராசி அன்பர்களே…! அன்னையின் நலனின் அக்கறை காட்டுவீர்கள்.
அதிக முயற்சி எடுத்தே முன்னேற முயல்வீர்கள். வெற்றி எப்பொழுதும் உங்கள் பக்கம் இருக்கும். நீர்நிலைகளில் கவனமுடன் இருக்க வேண்டும்.திட்டமிட்டு எதை செய்தாலும் காரியங்களில் தடை உண்டாகும். பொறுமையும் நிதானமும் இருந்தால் எப்போதுமே வெற்றி உங்கள் பக்கம். எதிர்பாராத செலவுகளை கட்டுப்படுத்த பாருங்கள். உடன் பணிபுரிபவர்களிடம் வீண் வாக்குவாதம் ஏற்படலாம். அனைவரையும் அனுசரித்து செல்லுங்கள்.முழு ஈடுபாட்டுடன் காரியங்களை செய்வது ரொம்ப ரொம்ப நல்லது. பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் சோர்வு ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் குழப்பமடைய வேண்டாம். கடன் பிரச்சனை சரியாகும்.
காதலில் உள்ளவர்களுக்கு சிறப்பான தருணங்கள் அமையும். கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை வடக்கு.
அதிர்ஷ்ட எண் 4 மற்றும் 5.
அதிர்ஷ்ட நிறம் நீலம் மற்றும் வெள்ளை நிறம்.