Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! பணி வாய்ப்பு கிட்டும்…! ஆற்றல் பெறுவீர்…!

மகரம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் ராசிக்கு அமைதியாக இருப்பது மிகவும் நல்லது.

சிலருக்கு தொலைதூரத்தில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு, மந்த நிலை தோன்றும் என்றாலும், அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியை பெற்று விடக்கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். நல்ல வரன்கள் உங்களை தேடி வரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தையும், பொழுதுபோக்கையும் தவிர்த்து விடுவது நல்லது.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.

Categories

Tech |