மகரம் ராசி அன்பர்களே…! கடந்தகால நல்ல செயலுக்கு பலன் உங்களை தேடி வரும்.
உங்களை அவமதித்தவரும் அன்பு பாராட்டுவார்கள். தொழில் வளர்ச்சியில் சாதனை ஏற்படும்.பண விஷயங்களில் முடிவு எடுக்கும் பொழுது கவனம் வேண்டும். சந்திராஷ்டமம் தினம் என்பதால் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். பயணங்களை முற்றிலும் தவிர்க்கப் பாருங்கள். பயணம் பொழுது உடைமைகள் மீது கவனம் வேண்டும். செலவை கட்டுப்படுத்த பாருங்கள். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு பேச்சில் நிதானம் வேண்டும். யாருக்கும் வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். பழைய பாக்கிகளை வசூல் செய்ய பொழுது கோபத்தை தவிர்க்கவும். வாகன செலவு இருக்கும். வீண் அலைச்சலை தவிர்க்கப்பாருங்கள். வேலை பளுவை குறைக்க பாருங்கள். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்வது ரொம்ப நல்லது.
காதலின் உள்ளவர்கள் நிதானமான போக்கு அணுக வேண்டும். மாணவ கண்மணிகளும் தீவிரம் எடுத்து பாடங்களை படிக்க வேண்டும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு.
அதிஷ்ட எண் 4 மற்றும் 5.
அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மட்டும் வெள்ளை நிறம்.