துலாம் ராசி அன்பர்களே…! காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாளாக இருக்கும்.
விட்டுப் போன உறவுகள் திரும்பவும் வந்து சேரக் கூடும். திருமண முடிவு நல்ல முடிவை கொடுக்கும். இன்றைய நாள் மிகவும் நல்ல நாளாக இருக்கும். ஆதாயம் உங்களைத் தேடி வரக்கூடும். எடுக்கும் முயற்சி அனைத்திலும் தடையின்றி வெற்றி பெறுவீர்கள். உடல்நிலையில் சின்ன பாதிப்பு தோன்றினாலும் பிரச்சனை இல்லை. உணவு விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவம் இருக்கும். வெளி பயணம் செல்ல நேரிடும். பயணங்கள் அலைச்சலைக் கொடுத்தாலும் லாபத்தையும் கொடுக்கும்.
காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இன்று இருக்கும். மாணவக் கண்மணிகள் சிரமமெடுத்து பாடங்களைப் படியுங்கள். விளையாட்டை தவிர்த்து விட்டு பாடத்தில் கவனம் வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டையும் சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது ரொம்ப நல்லது.
அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் 3. அதிர்ஷ்ட நிறம் ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்.