Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு..! சிக்கல்கள் தீரும்..! தாமதம் உண்டாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே…! கொடுக்கல் வாங்கல் இருக்கும் நாளாக இருக்கும்.

அனைத்து காரியங்களும் சிறப்பாக நடைபெறும்.பிரிந்து சென்றவர்கள் கூட பிரியமாக வந்து இணைவார்கள். பூர்வீக சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும். கல்யாணக் கனவுகள் நனவாகும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களின் உறவு மகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கும். மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். காதலில் வயப்படும் சூழலும் இருக்கும். தெய்வீக தரிசனத்திற்காக பயணம் மேற்கொள்வீர்கள். சமூகத்தில் தைரியம் புகழ் ஈட்டிக் கொள்வீர்கள். இன்றைய நாள் மிகவும் சிறப்பாக இருக்கும்.தனுசு ராசிக்காரர்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி மட்டுமே கிட்டும்.உத்தியோகத்தில் உள்ளவர்கள் திறம்பட செய்து முடித்து பாராட்டு பெறுவீர்.

காதலில் உள்ளவர்கள் நிதானமாகப் பேச வேண்டும்.மாணவக் கண்மணிகள் சிரமமெடுத்து நல்லபடியாக படியுங்கள்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தையும் அன்னதானமாக வழங்கி மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வந்தால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்ட எண்-3 மட்டும் 6.

அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |