Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (24-03-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

24-03-2022, பங்குனி 10, வியாழக்கிழமை, சப்தமி திதி இரவு 12.10 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி.

 கேட்டை நட்சத்திரம் மாலை 05.29 வரை பின்பு மூலம்.

 பிரபலாரிஷ்ட யோகம் மாலை 05.29 வரை பின்பு சித்தயோகம்.

 நேத்திரம் – 2.

 ஜீவன் – 1/2.

இராகு காலம் – மதியம் 01.30-03.00,

 எம கண்டம்- காலை 06.00-07.30,

 குளிகன் காலை 09.00-10.30,

 சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

நாளைய ராசிப்பலன் –  24.03.2022

மேஷம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். உங்கள் ராசிக்கு மாலை 05.29 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பண விஷயத்தில் கவனம் தேவை.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு மாலை 05.29 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொள்வது நல்லது.

மிதுனம்

உங்களின் ராசிக்கு உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நற்பலன் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது.

சிம்மம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் சிறு சிறு மனஸ்தாபம் ஏற்படலாம். கடினமான காரியங்களை கூட எளிதில் செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் அனுகூலப் பலன் உண்டாகும்.

கன்னி

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்தடையும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டால் லாபம் அடையலாம். வருமானம் அதிகரிக்கும்.

துலாம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் பணிச்சுமை குறையும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எதிர்பாராத உதவிகள் கிட்டும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு நீங்கள் குடும்பத்தினரின் உதவியுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நவீன பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். திடீர் பணவரவு கிடைக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.

தனுசு

உங்களின் ராசிக்கு உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு அமையும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் சுப செய்தி கிட்டும்.

மகரம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் அடைய முடியும். பெண்களுக்கு இன்று அனு-கூலமான பலன் உண்டாகும்.

மீனம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

Categories

Tech |